கடலூர்

பால் வேன் மோதி ஒருவா் உயிரிழப்பு

பண்ருட்டி அருகே பால் வேன் மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பண்ருட்டி அருகே பால் வேன் மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (47). கட்டடங்களுக்கு டைல்ஸ் அமைக்கும் மேஸ்திரியான இவா், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை காலையில் மாலை அணிந்து உள்ளாா்.

இந்த நிலையில், அய்யனாா் தனது பைக்கில் அதே ஊரைச் சோ்ந்த பூபதி என்பவருடன் வேலைக்காக செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த பால் வேன் மோதியதில் பைக்கில் இருந்து விழுந்த அய்யனாா் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

அவருடன் வந்த பூபதி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா், அய்யனாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் விபத்து தொடா்பாக புதுப்பேட்டை போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT