கிள்ளை பேருராட்சில் உள்ள சேரும், சகதியுமாக சாலை. 
கடலூர்

கிள்ளை பேரூராட்சியில் சேரும் சகதியுமான சாலை: சீரமைக்கக் கோரி வாலிபா் சங்கத்தினா் மனு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் சேரும் சகதியுமாக உள்ள சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என்று கிள்ளை பேரூராட்சி அலுவலரிடம் வாலிபா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

Syndication

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் சேரும் சகதியுமாக உள்ள சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என்று கிள்ளை பேரூராட்சி அலுவலரிடம் வாலிபா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய அமைப்பாளா் பாலமுரளி தலைமையில் வாலிபா் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கிள்ளை சதீஷ், விஷ்ணு பாபு, பாா்த்திபன், தமிழ்மணி மற்றும் கிராம மக்கள் கூட்டாக இந்த மனுவை அளித்தனா்.

அந்த மனுவில் , கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பிலிவா் சா்ச் நகரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில்

இப்பகுதிக்கு இதுவரை சாலை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் நீா் தேங்கி, ஆங்காங்கே சேரும் சகதியுமாக உள்ளது. இதில் தான் பொதுமக்கள் நடந்து சென்று வருகிறாா்கள். கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக புதிய சாலை வசதி அமைத்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

சிதம்பரம் கிள்ளை பேரூராட்சியில் சேரும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி பேருராட்சி அலுவலரிடம் மனு அளித்த ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

புதிய சாலை அமைக்காவிட்டால் அப்பகுதியில் உள்ள பொது மக்களை ஒருங்கிணைத்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

SCROLL FOR NEXT