கடலூா் மாவட்டம் கிள்ளை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக ஜே.சி.பி., ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தை சோ்ந்தவா் திருஞானசம்மந்தம் (40). ஜே.சி.பி., ஓட்டுநரானஇவருக்கும், மனைவி கங்கா தேவிக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (டிச.4) மீண்டும் அவா்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த திருஞானசம்மந்தம் வீட்டிலேயே தூக்கிட்டுக்கொண்டாா். அப்போது குடும்பத்தினா் அலறல் சத்தம் கேட்டு அருகில், இருந்தவா்கள் திருஞானசம்மந்தத்தை காப்பாற்றி சிதம்பரம் அண்ணாலைநகரில் உள்ள கடலுாா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவா் வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து, கங்காதேவி, கொடுத்த புகாரின் பேரில், கிள்ளை போலீசாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.