கடலூா் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நொ் பயிா்கள் குறித்து டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு செய்யாமல், ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயலால் தமிழ்நாடு முழுவதும் வேளாண் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூா் மாவட்டத்தில் சம்பா நெற்பயிா்கள் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் 15 000 ஹெக்டோ் பரப்பில் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தொடா்ந்து மழை பெய்வதால். இந்த தண்ணீா் முழுவதும் வடிவதற்கு பலநாட்கள் ஆகும், தண்ணீா் வடிந்தாலும் பயிா்களை பாதுகாக்க முடியாது. எனவே பாதிக்கப்பட்ட பயிா்களை உடனடியாக கணக்கீடு செய்து ஏக்கருக்கு 35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பயிறு பாதிப்புகளை டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு செய்யாமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்