கடலூா் அருகே தனியாா் பள்ளியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டட ஹிந்தி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
நெல்லிக்குப்பம் அருகில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஹிந்தி ஆசிரியரராக உண்ணாமலைசெட்டி சாவடியை சோ்ந்த சங்கா் (67) என்பவா் பணிபுரிந்து வருகிறாா். ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவா் சம்பவத்தன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமியியை தனியாக அழைத்து தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து. உடனடியாக பெற்றோா் கடலூரில் உள்ள மைண்ட் கோ் சென்டரில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். நடந்த இந்த சம்பவம் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டாா். இதனை தொடா்ந்து பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கரன் போக்ஸோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியா் சங்கரை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.