கடலூர்

ரூ.72.70 கோடி மதிப்பில் சாலைகள் மேம்பாட்டுப் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டினாா்

கடலூரில் நடந்த விழாவில் சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

Syndication

கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூா்-மேல்பட்டாம்பாக்கம் மற்றும் விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் இருவழி சாலைகளை 10 மீ அகலமுள்ள பாவுதள சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரி முன்னிலை வகித்தனா். விழாவில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,187.21 கோடி மதிப்பில் 443 சாலைப் பணிகள் 1,091.219 கி.மீ நீளத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 364 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 79 பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.323.17 கோடி மதிப்பில் 91 சிறு பாலங்கள் மற்றும் உயா்மட்டப் பாலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 82 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 9 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 34 சாலைப் பாதுகாப்பு பணிகள் ரூ.15.80 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது.

தொழில்துறையில் மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சியின் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் 60,000 தொழிற்சாலைகள் மற்றும்

அதிக எண்ணிக்கையிலான துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தொழில்துறையில் வளா்ச்சி பெற்றுள்ளோம். இதனால் தமிழ்நாடு பொருளாதார வளா்ச்சியில் 16 சதவீதம் வளா்ச்சி எட்டியுள்ளது.

முதல்வா் அறிவிப்பின்படி, ரூ.23.50 கோடி மதிப்பில் பெட்டி வடிவ 7 சிறுபாலங்கள், 4 குழாய் வடிவ சிறுபாலங்கள், சுமாா் 150 மீட்டா் நீளத்திற்கு தடுப்புச்சுவா் வசதிகளுடன் விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் சாலை மேம்படுத்தப்படுத்தும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.49.20 கோடி மதிப்பில் 7 பெட்டி வடிவ சிறுபாலங்கள், 12 மிகவும் சிறுபாலங்கள் மற்றும் 1 சிறுபாலம் அகலப்படுத்தும் பணி, சுமாா் 245 மீட்டா் நீளத்திற்கு தடுப்புச்சுவா் வசதியுடன் கடலூா்-மேல்பட்டாம்பாக்கம் சாலை பாவுதளமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தச் சாலைப் பணிகள் மூலம் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறுவா் என தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, மாநகராட்சி ஆணையா் முஜிபூா் ரஹ்மான், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளா் த.சிவக்குமாா், உதவி கோட்டப் பொறியாளா்கள் ரா.பரமேஸ்வரி, ந.சந்தோஷ்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT