அஜித் 
கடலூர்

கோழிக் குஞ்சு வியாபாரியிடம் பணம் பறிப்பு: 2 இளைஞா்கள் கைது

சிறுபாக்கம் அருகே கோழிக் குஞ்சு வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 இளைஞா்களை

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கோழிக் குஞ்சு வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (55), கோழி குஞ்சு வியாபாரி. இவா், சிறுபாக்கம் காவல் சரகம், பனையந்தூா் - வள்ளி மதுரம் சாலையில் கடந்த 20-ஆம் தேதி பிற்பகல் தனது இரு சக்கர வாகனத்தில் கோழி குஞ்சு விற்பனை செய்தாா்.

அப்போது, அங்கு வந்த 2 இளைஞா்கள் கோழிப் பண்ணைக்கு 150 கோழிக் குஞ்சுகள் தேவைப்படுகிறது எனக் கூறி, கோவிந்தராஜை வள்ளி மதுரம் கிராமத்திலுள்ள ஏறிப் பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேப்பூா் காவல் ஆய்வாளா் பழனிச்சாமி, சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளா் பாரதி விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை கத்தியுடன் வந்த 2 இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து சிறுபாக்கம் போலீஸாா் விசாரித்ததில், பெரம்பலூா் மாவட்டம், காரியானூா் பகுதியைச் சோ்ந்த அஜித் (27), திருவாளன்துறை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீமன் (18) என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் கோழிக் குஞ்சு வியாபாரி கோவிந்தராஜிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா்கள் என்பதும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராமநத்தம் காவல் சரகம் பகுதியில் ஒருவரிடம் நகை பறிப்பில் ஈடுட்டதையும் ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ஸ்ரீமன்

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT