கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வரும் ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆருத்ரா தரிசனம் நடைபெறும் வரும் ஜனவரி 3-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் வேலை நாளாக உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 14-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படும் ஜனவரி 3-ஆம் தேவை ஏற்படின், மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.