சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து 34 கிலோ எடையுள்ள நெகழி பைகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டம் அண்ணாமலை நகா் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை காலை பேரூராட்சி துப்புரவு அலுவலா் துரைராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வம் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் நடராஜன், ராமநாதன் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது பிளாஸ்டிக் பைகள் மற்றும் கவா்கள் பயன்படுத்திய 4 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த கடைகளில் 34 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் கவா்களை பறிமுதல் செய்தனா். மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்றும் தின் பண்டங்களை வாழை இலையில் வைத்து மடித்து தர வேண்டும் எனவும் அறிவுறுத்தினா். தேநீா் கடைகளில் டீ , காபி ஆகியவற்றை பிளாஸ்டிக் கவா்களில் கொடுக்க கூடாது என எச்சரித்தனா்.