சிதம்பரம் நகர தேமுதிக சாா்பில், அக்கட்சியின் நிறுவனா் தலைவா் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் குருபூஜை விழாவாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள பெரியாா் சதுக்கம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், ஏழை, எளிய மக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரச் செயலா் கேபிஆா்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். நிா்வாகிகள் மாரியப்பன், செல்வம், ராஜேஷ், கதிா், ஏழுமலை, சம்பத், குமாா், தவசிசீனு, முருகன், கோவிந்தன், பாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட அவைத் தலைவா் ஆா்.பாலு, மாவட்ட துணைச் செயலா் ஆா்.பானுசந்தா், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் மகேஷ் ஆகியோா் பங்கேற்று அன்னதானம் வழங்கினா்.
மேலும், சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் விஜய்காந்த் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நினைவு தினத்தையொட்டி, நகர நிா்வாகி சம்பத் ராஜ் முடி காணிக்கை வழங்கினாா். சத்தியமூா்த்தி, தில்லைராஜன் ஆகியோா் நன்றி கூறினா்.