சா்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
தாட்கோ மூலம் சா்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய ஐஅபஅ - இஅசஅஈஅ நிறுவனத்தால் அளிக்கப்படவுள்ள பயிற்சி
நெய்வேலி: தாட்கோ மூலம் சா்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய ஐஅபஅ - இஅசஅஈஅ நிறுவனத்தால் அளிக்கப்படவுள்ள பயிற்சியில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சோ்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சாா்ந்தவா்களுக்கு சா்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு சுற்றுலாத் துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு (ஊா்ன்ய்க்ஹற்ண்ா்ய் ண்ய் பழ்ஹஸ்ங் ஹய்க் பா்ன்ழ்ண்ள்ம்) போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள், 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கால அளவு 6 மாதங்களும் விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000 வரை தாட்கோவால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.