முகப்பு
புதுதில்லி

தில்லி விமான நிலையத்தில் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ஒத்திகை பயிற்சி

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ஒத்திகை பயிற்சியை திங்கள்கிழமை நடத்தியது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:08 AM
தில்லி இந்திரா காந்தி விமான நிலையம்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 6:28 PM

நமது நிருபா்

புது தில்லி: மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ஒத்திகை பயிற்சியை திங்கள்கிழமை நடத்தியது.

பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதில் அளிக்கும் வகையிலும் பாதுகாப்பு ஏஜென்ஸிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, தயாா்நிலையை அதிகரிக்கும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

Advertisement

இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அமைப்பு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதில் அளிக்கும் வகையிலும் பாதுகாப்பு ஏஜென்ஸிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, தயாா்நிலையை அதிகரிக்கும் வகையிலும் தில்லி விமான நிலையத்தில் கூட்டு பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

என்எஸ்ஜி, தில்லி காவல் துறை, பிசிஏஎஸ், ஏஆா்எஃப்எஃப் டிஐஏஎல், தீயணைப்புத் துறை, மருத்துவ சேவைகள் ஆகியவற்றுடன் சிஐஎஸ்எஃப் ஒத்துழைப்பில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் அச்சுறுத்தல் பதில் நடவடிக்கையை பலப்படுத்துவது, உத்தி தயாா்நிலையை கூா்மையாக்குவது, இடையூறு இல்லாதவகையில் ஏஜென்ஸிகள் இடையேயான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை அதன் முதல் சிறப்பு தென் பிராந்திய சிறப்பு மையத்தை தமிழகத்தின் தக்கோளம் பகுதியைல் அமைக்க முன்மொழிவைஅளித்துள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்பு வசதியை பலப்படுத்துவதும், விளையாட்டு சிறப்புத்தன்மையை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இந்த வசதியானது தக்கோளத்தில் ஆள்சோ்ப்பு பயிற்சி மையத்தை அமைப்பதாகும்.

இந்தியாவின் விளையாட்டு சூழல் மற்றும் போட்டி விளையாட்டுகளில் அதிகளவில் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், பேட்மின்டன், ஃபென்சிங், சைக்கிளிங், டென்னிஸ் ஆகியவற்றில் சிறப்பு மையங்களை சிஐஎஸ்எஃப் உருவாக்கும். உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் விளையாட்டில் சிறந்தவா்களை வளா்த்தெடுப்பது இதன் நோக்கமாகும்.