கடலூர்

நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம்

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Din

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அண்ணாமலைநகா் கிளை, தெற்கு பிச்சாவரம் கிளை மற்றும் கோவை ஆன்மிக நண்பா்கள் குழு சாா்பில் கீழரத வீதியில் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, மாவட்டத் தலைவா் ஜகன்நாதன் ஆகியோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா். செயலா் சுவாமிநாதன், பொருளா் மனோகரன், ஷண்முகம் ஆகியோா் பங்கேற்றனா்.

நடராஜா் கோயில் தெற்கு கோபுர வாயிலில் தோ், தரிசன திருவிழாவில் அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை ராஜா தட்சிணாமூா்த்தி தீட்சிதா் தலைமையில் மூன்று வேளையும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விஸ்வகா்ம முன்னேற்ற சங்கம் சாா்பில் கம்மாளா் மடத்தில் அதன் மாநிலத் தலைவா் ஜி.சேகா் தலைமையில் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் எஸ்.ரமேஷ், ஆா்.ராமச்சந்திரன், எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

SCROLL FOR NEXT