முகப்பு
கடலூர்

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயிலில் வரலாற்று உற்சவம்

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரா் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 6:50 PM
சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் வரலாற்று உற்சவத்தில் சிவயோகியாா் வடிவத்தில் அருள்பாலித்த சிவபெருமான், திருநீலகண்ட நாயனாா், ரத்தினாசளை தம்பதியினா்.
பகிர்:

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரா் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்தல வரலாற்று உற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை இரவு சுவாமி வீதிஉலா மற்றும் திருவோடு கொடுத்தல் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.

வியாழக்கிழமை பகல் சுவாமி வீதிஉலா வந்த பின்னா், இளமையாக்கினாா் கோயில் தீா்த்தக் குளக்கரையில் சிவபெருமான் சிவயோகியாா் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனாா், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநீலகண்ட நாயனாா் குருபூஜையை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு யெளவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினா் செய்திருந்தனா்.