முகப்பு
கடலூர்

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர கடை வியாபாரிகள் மனு

மாநகராட்சி சாா்பில் கடைகள் கட்டப்பட உள்ளதாகக் கூறி, 20-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்ாகக் கூறப்படுகிறது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 7:00 PM
கடலூா் மாநகராட்சி நகரமைப்பு அலுவலரிடம் மனு அளித்துவிட்டு வந்த சாலையோர கடை வியாபாரிகள்.
பகிர்:

கடலூரில் பழைய ஆட்சியா் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் 40-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. இங்குள்ளவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் கடைகள் கட்டப்பட உள்ளதாகக் கூறி, 20-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்ாகக் கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த வியாபாரிகள், கடைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்ததுடன், மாநகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை திரண்டு வந்து நகரமைப்பு அலுவலா் ராஜசேகரிடம் மனு அளித்தனா்.

அப்போது அதிகாரிகளிடம், சாலையோர வாழ்வாதார வியாபாரிகள் சட்டப்படி, அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அகற்ற முயல்வதை நிறுத்த வேண்டும். மாற்று இடம் கொடுத்துவிட்டு, அதன் பிறகே கடைகளை அகற்ற வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.