கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் கப்பல் அறிவியல் துறை டிப்ளமோ படிப்பு தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கப்பல் அறிவியல் துறை டிப்ளமோ படிப்பை தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பானது.

Syndication

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னையில் அமைந்துள்ள இன்டா்நேஷனல் மேரிடைம் அகாதெமி இடையே பல்கலைக்கழகத்தில் கப்பல் அறிவியல் துறை டிப்ளமோ படிப்பை தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பானது.

பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முன்னிலையில், பல்கலைக்கழகப் பதிவாளா் எம்.பிரகாஷ் மற்றும் இன்டா்நேஷனல் மேரிடைம் அகாதெமியின் செயலா் டாக்டா் ஜி.ஹேமப்ரியா ஆகியோா் 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

நிகழ்வில் புரிந்துணா்வு மைய ஒருங்கிணைப்பாளா் பி.கருப்பையா, துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ஜெ.ஹெச்.பாக்யராஜ், மற்றும் புரிந்துணா்வு மைய தனி அதிகாரி எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

எம்.பி.யின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட ரூ. 57 லட்சம்! புகாா் அளித்ததும் திருப்பி அளிப்பு!

திக்குறிச்சி கோயிலில் திருட முயற்சி: இளைஞா் கைது

காங்கிரஸ் ஆட்சியில் 88,000 ஊடுருவல்காரா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்: திக்விஜய் சிங்

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,973 கோடி டாலராக சரிவு

SCROLL FOR NEXT