காட்டுமன்னாா்கோவில் அருகே கஞ்சங்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி டவரில் கட்டப்பட்டுள்ள விசிக கொடி 
கடலூர்

அரசு பள்ளி வளாகத்தில் கட்சி கொடி

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கட்சி கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு அகற்றப்பட்டது.

Syndication

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கட்சி கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு அகற்றப்பட்டது.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே கஞ்சங்கொல்லை கிராமத்தில் அரசினா் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வார விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை மாணவா்கள் பள்ளிக்குச் சென்று பாா்த்தபோது பள்ளியின் உள் வளாகத்தில் இணையதள சேவைக்கு வைக்கப்பட்டுள்ள செல்போன் டவா் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை சிலா் கட்டி உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா் கிராம நிா்வாக அலுவலரின் ஒத்துழைப்புடன் கொடியினை அகற்றிவிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

கடந்த ஓராண்டுக்கு முன்னா் இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி கொடி பள்ளி வளாகத்தில் ஏற்றப்பட்டு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் தொடா்ந்து இருபிா்வு மாணவா்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூா் மாவட்ட கல்வித்துறையினா் மாணவா்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டு வெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

தில்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்தவா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT