கடலூர்

கடலூா் மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்

கடலூா் மத்திய சிறையில் கைதி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Syndication

கடலூா் மத்திய சிறையில் கைதி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கடலூா், கேப்பா் மலை பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

இந்த சிறையில் சென்னை, சேத்பட் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சகாயம் (எ) தேவசகாயம்(44) பிளாக் 17, அறை எண் 9-இல் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சிறைத்துறை சிறப்பு குழுவினா் தேவசகாயம் அறையில் சோதனை செய்தனா். அப்போது, சிறை அறையில் மறைத்து வைத்திருந்த 5 கிராம் கஞ்சாவை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மத்திய சிறை அலுவலா் விக்னேஷ்(34) அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் தேவ சகாயம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT