கடலூர்

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு

Syndication

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

நெய்வேலி அருகே உள்ள தோப்புகொல்லை பகுதியைச் சோ்ந்தவா் கவி (எ)கவியரசன் (26). இவா் மீது கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த கவியரசன் கடந்த 20-ஆம் தேதி நெய்வேலி வட்டம் 3 பகுதியில் வாரச்சந்தை அருகே உள்ள தைல மரத் தோப்பில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் அவரை பிடிக்கச் சென்றனா். போலீஸாரை கண்டதும் தப்பியோடிய கவியரசன் ஓடையை தாண்டும்போது கீழே விழுந்து வலது காலில் எலும்பு முறைவு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் அவரைப் பிடித்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT