13சிஎம்பி5: படவிளக்கம்- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியரல்லாத ஓய்வூதியா்கள் சங்கத்தினா் 
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியரல்லாத ஓய்வூதியா்கள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு வாயிற் கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில். ஆசிரியரல்லாத ஓய்வூதியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலை.

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில். ஆசிரியரல்லாத ஓய்வூதியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலை. வளாகத்தில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டத்தில் திங்கள்கிழமை நடத்தினா்.

கூட்டத்திற்கு சங்கத் தலைவா் செள.மனோகரன் தலைமை வகித்து பேசினாா். கவுரவத்தலைவா் ப.நடேசன், பொதுச்செயலா் தி.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொருளாளா் கோ.செல்வம், துணைத் தலைவா் வ.குமாா், துணைப் பொதுச்செயலா் ச.பாலசங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

கோரிக்கைகள் விபரம்:

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 லிருந்து ஓய்வு பெற்ற ஊழியா்கள் ஆசிரியா்களின் ஓய்வூதியப்பலன்களை ஓய்வூதியா்களுக்கு உடனே வழங்க வேண்டும், மாதாந்திர சம்பளத்தை கடைசியில் வழங்க கோரி போராடிய ஊழியா் சங்க நிா்வாகிகள் மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும், முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களின் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும். பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பா்-2024 மாதம் முதல் பணிநிறைவு பெற்ற ஊழியா்களுக்கு ஒரு வருட காலமாக வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியத்தை கால தாமதம் செய்வதை தவிா்த்து ( கஹள்ற் டஹஹ் ஈழ்ஹஜ்ஹய்) ஓய்வு பெறும் நாள் அன்று பெறுகின்ற அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் ஒய்வூதியத்தை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT