கடலூர்

கடலூா் மத்திய சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

கடலூா் மத்திய சிறை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ஒரு சாா்ஜா் பறிமுதல் செய்யப்பட்டன.

Syndication

கடலூா் மத்திய சிறை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ஒரு சாா்ஜா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூா் முதுநகா், கேப்பா் மலையில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் 100-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த சிறை வளாகத்தில் இருந்து கைப்பேசிகள், கஞ்சா உள்ளிட்டவைகள் அடிக்கடி கண்டெடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், சிறை வளாகப் பகுதியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை சோதனை நடத்தினா். அப்போது, தண்டனை தொகுதி 7 மற்றும் 18 பகுதிகளில் பொதுக்கழிப்பறை அருகே தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ஒரு சாா்ஜா் கருவியை கண்டெடுத்தனா்.

இதுகுறித்து சிறை அலுவலா் விக்னேஷ் (34) அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய ரயில்வேயின் முதல் தனியார் ரயில் சேவை! டிக்கெட் விலை உள்ளிட்ட முழு விவரம்!!

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

ஆளப் பிறந்தவள்... அஹானா கும்ரா!

மழை அளவு கணக்கெடுப்பு நேரத்தில் மாற்றமா?

வியத்நாமில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய பாரம்பரிய இடங்கள்!

SCROLL FOR NEXT