இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே 2019ஆம் ஆண்டு முதல் தனியார் ரயிலையும் அறிமுகப்படுத்தியிருந்தது.
தனியார் ரயில் என்றதும், தனி ஒருவருக்குச் சொந்தமானது என்று கருத வேண்டாம். இந்த ரயிலை, இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி இயக்கி, பராமரித்து வருகிறது. அதனால்தான் இது தனியார் ரயில் என அழைக்கப்படுகிறது. இது ரயில் சேவை தொடங்கப்பட்டு தற்போது 6 ஆண்டு கால சேவையை நிறைவு செய்திருக்கிறது.
இந்த தனியார் ரயில் எனப்படும் தேஜஸ் விரைவு ரயில், புது தில்லி முதல் லக்னௌ இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் வர்த்தக ரீதியிலான பயணம் 2019ஆம் ஆண்டு அக். 4ஆம் தேதி தொடங்கியது. இந்த ரயில் இயக்கத்தைத் தொடங்கி ஒரு மாதத்துக்குள் வருவாயில் புதிய சாதனை படைத்து ரூ.7.73 லட்சம் ஈட்டியிருக்கிறது.
ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் ரயில்களை எல்லாம் விட, இந்த தனியார் ரயில் என்று அழைக்கப்படும் தேஜஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம். மேற்கண்ட ரயில்களும் இதே வழியில் இயக்கப்படுகிறது என்றாலும் கட்டணம் தனியார் ரயிலில் அதிகமாகவே இருந்து வருகிறது.
ஐஆர்சிடிசி இயக்கும் தேஜஸ் விரைவு ரயிலில் ஏசி இருக்கை வசதி மற்றும் எக்ஸிக்யூட்டிவ் இருக்கை வசதி என இரண்டு வசதிகள் உள்ளன. இதுபோலவே சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களிலும் இருக்கின்றன. ராஜ்தானி விரைவு ரயிலில் நெடுந்தொலைவு ரயில் என்பதால் குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதியும் இருக்கும்.
தேஜஸ் ரயிலில் புது தில்லி - லக்னௌ செல்ல ஏசி இருக்கை வசதிக்கு ரூ.1679ம், எக்ஸிக்யூட்டிவ் இருக்கை வசதிக்கு ரூ.2,457ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வந்தே பாரத் மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் ஏசி இருக்கை வசதிக்கு ரூ.1,255ம், சதாப்தியில் எக்ஸிக்யூட்டிவ் வசதிக்கு ரூ.1955ம், வந்தே பாரத் ரயிலில் ரூ.2415ம் கட்டணம்.
இதையும் படிக்க.. 174 ஆண்டுகளில் உலகம் பார்த்திடாத புயல்! ஜமைக்கா கடலில் சுழன்றுகொண்டே நகரும் மெலிஸா!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.