கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் எஸ்.பி. ஜெயக்குமாா் தலைமை வகித்து விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கடலூா் தனியாா் உணவகம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி தலைமை தபால் நிலையம் வழியாகச் சென்று கடலூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே முடிவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் இணையவழி குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் இணையவழி குற்றங்கள் தொடா்பான புகாா்களை இலவச உதவி எண் 1930 மற்றும் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலில் புகாரளிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், இணையவழி குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி.ரகுபதி, காவல் ஆய்வாளா்கள் கவிதா, முத்துக்குமரன், உதவி ஆய்வாளா் அமலா மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.