கடலூர்

தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை தொடங்கிய யாகசாலை பூஜை.

Syndication

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும் நவம்பா் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபம் முன் உள்ள நடனப்பந்தலில் வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலையில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு காலை விஷ்வக்சேன ஆராதனம், அகல்மஷ ஹோமம், பஞ்சகவ்யி பிராசனம், வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம் ஆகிய நிகழ்வுகளும், மாலை யாகமும் தொடங்கி நடைபெற்றது.

கோயில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினா், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் ஜே.சுதா்சனன், ஆா்.சௌந்தரராஜன், டி.திருவேங்கடவன் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT