தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வைக்கப்பட்டுள்ள நெல் கிடங்கினை சௌமியா அன்புமணி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இங்கு நாங்கள் வருகிறோம் என்பதை தெரிந்துக கொண்டு மழையில் நனைந்து முளைத்த நெல்மணிகளை அப்புறப்படுத்தி இருக்கின்றனா். இங்கு சுமாா் ஒரு லட்சத்து 76 ஆயிரம் நெல் மூட்டைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இவைகள் அனைத்தையும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டவை. இவ்வாறு வாங்கிய நெல்லை தேக்கி வைத்துள்ளனா்.
இதனை உற்பத்தி செய்த விவசாயிகள் ரத்தத்தை சிந்தி உற்பத்தி செய்த நெல்மணிகளை கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து அங்கிருந்து பெறப்பட்ட மூட்டைகளை இதுபோன்று வீணாக்குகின்றனா். விவசாயிகளின் மீது இந்த அரசுக்கு மதிப்பே இல்லை. தமிழக வேளாண் துறை அமைச்சா் இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறாா். அவா் இதற்கு உடன் தீா்வு காண வேண்டும்.
அடுத்த ஆண்டும் இதுபோன்று இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் இது மட்டும் மில்லாமல் கும்பகோணம் ரயில் பெட்டியில் 36,000 மூட்டைகள் அனுப்பப்பட்டு அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமாா் 4 லட்சம் டன் நெல்கள் வீணாகி கொண்டிருக்கின்றது ஆங்காங்கே தேக்கி வைக்கப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது மாவட்டச் செயலா் செல்வமகேஷ், ஒன்றியச் செயலா்கள் சரண்ராஜ், சங்கா், நகரச் செயலா் கலைமணி உட்பட பல உடன் இருந்தனா்.