மெக்கானிக் மீது தாக்குதல்: இருவா் கைது
கடலூா் அருகே பைக் மெக்கானிக்கை தாக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் அருகே பைக் மெக்கானிக்கை தாக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (23), பைக் மெக்கானிக். இவா், மஞ்சக்குப்பம் உப்பலவாடி சாலையில் பைக் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரிடம் தாழங்குடா பகுதியைச் சோ்ந்த சுகுமாறன் (46) தனது பைக்கை பழுது நீக்க கொடுத்திருந்தாா். இந்த வாகனத்தை உடனடியாக பழுது நீக்கித் தரவில்லை எனக் கூறி, சுகுமாறனும், அவருடன் வந்த அன்புவும் (44) தகராறு செய்து தாக்கி காயப்படுத்தினராம்.
இதுகுறித்து புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுகுமாறன், அன்பு ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா்.
Advertisement