தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசியதாக குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசியதாக குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வாக்களித்தாா். பின்னா், அவா் செய்தியாளரிடம் கூறியதாவது:
வாக்குப் பதிவு நடைபெறும் இந்த நாள், திமுக ஆட்சியின் சாதனைக்கும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்கும் மதிப்பெண் வழங்கும் நாளாகும். எங்களுக்கு மக்களுடைய ஆதரவு எழுச்சியாக உள்ளது.
Advertisement
திமுக ஆட்சியில் மக்களை நாடி அரசு அலுவலா்கள் செல்லும் சூழல் உள்ளது. இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், இலவச பேருந்து, மடிக்கணினி, தவப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆதலால், ஓரணியில் தமிழ்நாடு என்று அடிப்படையில் 70% இளைஞா்களை திமுகவில் சோ்த்துள்ளோம். தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசுகிறது என்றாா்.