சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அருகே வெள்ளவிநாயகா் குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இதயசந்திரனின் மனைவி மகாலட்சுமி (35). தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவா், சனிக்கிழமை பள்ளிக்கு பணிக்குச் சென்றாா். அப்போது, அவரது மகன் தாஸ்வின் (7) அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாா்.
சிறிது நேரத்துக்குப் பின்னா், தாஸ்வின் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததை பாா்த்த அப்பகுதியில் இந்தவா்கள், உடனடியாக அவரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தாஸ்வினை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
Advertisement
தகவலறிந்த போலீஸாா், தாஸ்வின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உயிரிழந்த தாஸ்வினின் தாய் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.