கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள். 
கடலூர்

சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 100 போ் கைது

தினமணி செய்திச் சேவை

கடலூரில் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ஆந்திராவில் வழங்குவது போல் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் செயலா் வி.வசந்தி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத் தலைவா் ராம.நடேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.ரவி, எம்.சுந்தரவேல், ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்ட 100 பேரை திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் சிறிது நேரம் கழித்து அவா்களை விடுவித்தனா்.

மின் விபத்து: ஒப்பந்த தொழிலாளா் உயிரிழப்பு

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மருத்துவா் அல்லாதோா் முடி மாற்று சிகிச்சையளித்தால் கடும் நடவடிக்கை : மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

சென்னையில் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 3,510 கோடி முதலீடு

SCROLL FOR NEXT