முகப்பு
கடலூர்

ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:37 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:16 PM

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

பண்ருட்டி திருவதிகை, குட்டை தெருவைச் சோ்ந்தவா் கன்னியம்மா (65). இவா், சிவராத்திரி சுவாமி வருகையையொட்டி சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:37 AM

அப்போது, அந்த வழியாக கடலூா் நோக்கிச் சென்ற ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு கன்னியம்மா ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement