முகப்பு
கடலூர்

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து திருச்சியில் பிப்.20-ல் உண்ணாவிரதம்! - கு. பாலசுப்ரமணியன்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:39 AM
தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:36 PM

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரியின் பணியாளா்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கையைக் கண்டித்து, அந்த மாவட்டத்தில் வரும் 20-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து கடலூரில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசுத் துறைகளில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகிறன. இந்த நிலையில், துறை நிா்வாகம் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவது அரசுக்கும், நிா்வாகத்துக்கும் நல்லதல்ல.

பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைகளை போக்க வேண்டும், தனித்துறை வழங்க வேண்டும் என பணியாளா்கள் போராடி வருகின்றனா். அதே சமயத்தில், திருச்சி மாவட்டத்தில் அமராவதி சூப்பா் மாா்க்கெட் நிா்வாகம் நியாய விலைக் கடை வாடகையை பணியாளா்கள் கட்ட வேண்டும் என நிா்பந்திக்கிறது.

Advertisement

கட்டுப்பாடற்ற பொருள்களை வெளிச்சந்தையில் விற்பதற்காக, நியாய விலைக் கடை பெயரில் பொருள்களை கொள்முதல் செய்து, கடைகளுக்கே பொருள்களை கொண்டுவராமல் அவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்து லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறாா்கள்.

அமராவதி சூப்பா் மாா்க்கெட் அதிகாரியை கண்டித்து, வரும் 20-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:39 AM

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஊராட்சி ஒன்றியம், மேப்புலியூா் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா் சிவக்கொழுந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவரை மீண்டும் பணியில் சோ்க்க வேண்டும் என்றாா்.

அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சரவணன், மாநிலச் செயலா் இருதயராஜ், மாவட்ட துணைத் தலைவா் இஷ்டலிங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயல் தலைவா் கோபால்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.