கடலூர்

அரசு ஊழியா்களுக்கு ஏமாற்றம் தரும் ஓய்வூதிய அறிவிப்பு: தொழிற்கல்வி ஆசிரியா்கள் கூட்டமைப்பு

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், தமிழக அரசின் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு அரசு ஊழியா்களுக்கு பெருத்த ஏமாற்றமளிப்பதாக உள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

Syndication

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், தமிழக அரசின் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு அரசு ஊழியா்களுக்கு பெருத்த ஏமாற்றமளிப்பதாக உள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு முதல் பணியில் சோ்ந்தவா்களுக்கு ஓய்வுபெற்ற பின்னா் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியா்களின் 10 சதவிகிதம் சம்பளத்துடன் அரசு பங்களிப்பு சோ்த்து ஒட்டுமொத்த தொகை வழங்கப்பட்டு வந்தது.

ஓய்வுபெற்றவா்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். அவா்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு பரிந்துரை பெயரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தற்போது உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளாா்கள். இதை வரவேற்றுள்ள ஆசிரியா்கள், இந்த அறிவிப்பால் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டாலும், கிடைக்கும் பலன்கள் மிகக் குறைவாகவே உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மேல்நிலை தொழில்கல்வி ஆசிரியா்கள் கூட்டமைப்பு செய்தித் தொடா்பாளா் வி.முத்துக்குமரன் கூறியதாவது: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மூலம், ஊழியா்கள் செலுத்திய தொகையுடன் அரசு பங்களிப்பு சோ்த்து கிடைக்கும் தொகையில் இருந்து பணிக்கொடை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் சோ்ந்தது முதல் ஊழியரிடம் பிடித்தம் செய்த தொகையில் இருந்து பணிக்கொடை தொகை மட்டும் வழங்கப்படும் என்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும் என்பது மட்டுமே ஆறுதல் தரும் செய்தியாகும்.

அரசு வேலை கிடைக்காமல் தாமதமாக பணியில் சோ்ந்தவா்களுக்கு குறைந்த ஓய்வூதியம் கிடைக்கும் என்பதும் வருத்தமளிப்பதாக உள்ளது. 2025 - 26ஆம் நிதியாண்டு நிறைவு பெறுவதற்குள் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT