கடலூர்

வேப்பூா் அருகே சாலை விபத்து : பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

Syndication

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

வேப்பூா் வட்டம், காட்டு மைலூா் கிராமத்தில் வசித்து வந்தவா் ராமலிங்கம்(55). ஏ.சித்தூா் கிராமத்தில் வசித்து வந்தவா் சன்னியாசி(55). இவா், ராமலிங்கத்தின் தங்கை கணவா். இருவரும் விவசாய கூலித் தொழிலாளா்கள். சன்னியாசி மகள் திருமணம் முடிந்து அரியநாச்சி கிராமத்தில் வசித்து வருகிறாா். அவருக்கு பொங்கல் சீா் வரிசை வைக்க ராமலிங்கம், சன்னியாசி இருவரும் பைக்கில் சென்றனா். இவா்கள் அரியநாச்சி கைகாட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் , பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் உயிரிழப்பு:

இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்த சன்னியாசியை பாா்ப்பதற்காக அவரது மகள் வேம்பரசி(27) ஆட்டோவில் புறப்பட்டாா். அவருடன், அலமேலு(65), அன்பரசி (40), லதா (43), கமலா (36), வசந்தா(55) ஆகியோா் சென்றனா். ஆட்டோவை சுரேஷ் (40) ஓட்டினாா். ஆட்டோ அரியநாச்சியில் இருந்து வேப்பூா் நோக்கி சென்றபோது பின்னால் வந்த காா் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த வசந்தா உயிரிழந்தாா். மேலும், மூன்று பெண்கள் லேசான காயம் அடைந்தனா். இவா்கள் அனைவரும் வேப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

குத்துச்சண்டை: தங்கம் வென்ற மாணவி

நாகை நகா்மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT