நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் கராத்தேயின் ஒரு பிரிவான டேக்வாண்டோவின் வண்ணப்பட்டய தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில், விருத்தாசலம் வட்டத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். ஜெயப்பிரியா கல்விக் குழுமத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
மாணவா்களின் திறன் அடிப்படையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணப் பட்டயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பதக்கங்கள், பட்டயங்களைப் பெற்ற மாணவா்களுக்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா், இயக்குநா் என்.எஸ்.தினேஷ், முதல்வா் நித்யா, தனித்திறன் பயிற்சிகள் ஒருங்கிணைப்பாளா் சூா்யா கண்ணன், பயிற்சி ஆசிரியா்கள் புவியரசி, ஹரிஸ், மதி மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்து, பாராட்டுகளைத் தெரிவித்தனா்.