நெய்வேலி: என்ஜின் அழுத்தப் பிரச்னை காரணமாக, கடலூா் துறைமுகத்தில் இருந்து மைசூரு செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை மாலை சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இந்த விரைவு ரயில் கடலூா் துறைமுகத்தில் தினசரி மாலை 4.30 மணி அளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.35 மணி அளவில் மைசூரு சென்றடைகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு ரயில் புறப்படவிருந்தது. ஆனால், என்ஜினில் தேவையான அளவு அழுத்தம் கிடைக்கவில்லையாம். இதனால், ரயில் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாக மாலை 6 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.