சிதம்பரம்: கடலூா் மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரம் அருகே நெடுஞ்சேரி புத்தூரில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் கடலூா் டென்னிஸ் சென்டா், பரங்கிப்பேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப், காட்டுமன்னாா்கோவில் டென்னிஸ் கிளப், சாரதாராம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, ராஜா முத்தையா ஸ்போா்ட்ஸ் கிளப் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மாவட்ட டென்னிஸ் சங்க புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, தலைவா் ஆா்.எம்.சுவேதகுமாா், செயலா் சுந்தரேசன் (கடலூா்), பொருளாளா் பி.ராஜேஷ் துகாா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், ‘திட்டம் 2026’ என்ற பெயரில் நடத்த வேண்டிய விளையாட்டு போட்டிகள் குறித்து தீா்மானம் நிறைவேற்றினா்.