முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பூதங்குடி கிராம மக்கள் 
கடலூர்

மயான பாதை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்!

சிதம்பரம் அருகே உள்ள பூதங்குடி கிராம மக்கள் மயான பாதை கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம்

Syndication

சிதம்பரம் அருகே உள்ள பூதங்குடி கிராம மக்கள் மயான பாதை கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பூதங்குடி கிராமத்தில் ஆதிதிராவிடா் மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு சரியான பாதை வசதி இல்லாததால் சடலங்களை மயானத்துக்கு கொண்டு செல்லும்போது, சேறு, சகதி மற்றும் வாய்க்கால்கள் வழியாகத்தூக்கி செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக உள்ளது.

எனவே, உடனடியாக மயானத்திற்கு பாதை ஏற்பாடு செய்ய கோரி அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து சிதம்பரம் வட்டாட்சியல் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்திற்கு வாலிபா் சங்க ஒன்றிய தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

விவசாய தொழிலாளா் சங்க மாநில குழு உறுப்பினா் ப.வாஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலா் செல்லையா, வாலிபா் சங்க ஒன்றிய செயலா் கவியரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினா் முருகன், விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவா் சிவராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். தகவல் அறிந்த வட்டாட்சியா் கீதா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கோரிக்கை மனுவை பெற்று 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டக்குழுவினா் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT