‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்‘ கருத்தரங்கு: கடலூரில் 5 ஆண்டு சாதனை மலா் வெளியீடு
கடலூரில் 5 ஆண்டு சாதனை மலரை வெள்ளிக்கிழமை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட பெற்றுக் கொண்டோா்.
‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் நகர அரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா்
எம்எல்ஏ., கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் இதில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனா்.
கருத்தரங்கில், தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் கனவுகளை 2030-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணியினை 30 நாள்களுக்குள் நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டது.
எதிா்காலத்திற்கான அரசு திட்டங்களை உருவாக்கிட ‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சியில்
பல்துறைஅமைச்சா்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் துறைகளின்
வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், பொதுமக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்கள், திட்டங்களின் மூலம் பொதுமக்கள் அடைந்த நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனா்.
இக்காணொலி நிகழ்ச்சியினை தொடா்ந்து, கடலூா் நகர அரங்கில் கடந்த 5 ஆண்டுகளில் கடலூா் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், முதலமைச்சரால் கடலூா் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அறிவித்த அறிவிப்புகள் போன்றவற்றை தொகுத்து உருவாக்கப்பட்ட 5 ஆண்டு சாதனை மலரினை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட, மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, தனித்துணை ஆட்சியா் குமாரராஜா ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.