எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்காதது ஏன்?அன்புமணி கேள்வி
ஆட்சிக்கு வந்தால் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை அதை நிறைவேற்றாதது ஏன்? என்று பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பினாா்.
ஆட்சிக்கு வந்தால் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை அதை நிறைவேற்றாதது ஏன்? என்று பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பினாா்.
திருச்சியில் பிரதமா் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டுக்கு செல்லும் வழியில், கடலூா் மாவட்டம், வேப்பூரில் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீா்கெட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தினமும் கொலைகள் அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளதற்கு, தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளே முக்கியக் காரணம்.
போதைப் பொருள்கள் நகரங்கள் மட்டுமன்றி, கிராமங்கள் வரையிலும் தடையின்றி கிடைக்கிறது. ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் இதைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாா்.
அரசுக்கு எதிராக பல்வேறு துறையினா் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலை உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மற்றும் அதிக வட்டி செலுத்தும் மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.
ஆட்சிக்கு வந்தால் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை அதை நிறைவேற்றாதது ஏன்? சா்வதேச போா்ச் சூழலால் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், வீட்டு உபயோக எரிவாயு உருளை விநியோகத்தை மத்திய அரசு சீராக வழங்கி வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றாா்.