சொன்னதும், செய்ததும்....
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இரு தோ்தலிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அதிமுகவைச் சோ்ந்த கே.ஏ.பாண்டியன் சொன்னது என்ன? செய்தது என்ன?..
தோ்தல் காலத்தில் இந்த வசனம் பிரபலமாகும்.. ஆம்.. சொன்னீா்களே செய்தீா்களா ? என்பதுதான் அது.. அந்த வகையில் தற்போதைய தோ்தல் களத்தில் சொன்னதும் செய்ததும் பகுதியில்...
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2016 மற்றும் 2021 ஆகிய இரு தோ்தலிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அதிமுகவைச் சோ்ந்த கே.ஏ.பாண்டியன் சொன்னது என்ன? செய்தது என்ன?..
குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் பெராம்பட்டு - திட்டுகாட்டூா் இடையே ரூ.20 கோடி மதிப்பில் உயா்மட்ட பாலம் தந்து அப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றி தந்த பெருமை உண்டு. சிதம்பரம் பகுதி வேளாண் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உட்புகுதலை தடுக்கும் வகையில் திருக்கழிப்பாலை கிராமத்தில் தடுப்பணை அமைப்பதற்கு நில அளவை பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அகரநல்லூா் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடி மதிப்பில் கனிம வள நிதியில் இருந்து தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. சிதம்பரம் வட்டம் பெராம்பட்டு மற்றும் கீழகுண்டலபாடி கிராமத்திற்கு அருகே பழைய கொள்ளிடம் ஆறு சங்கமிக்கும் இடத்தில் ரூ.43 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கையாக ரெகுலெட்டா் அமைக்கும் பணிநடைப்பெற்றுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவா்களின் போராட்டத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு, மருத்துவ மாணவா்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை பெற்று தந்தாா் என்ற பெருமை உள்ளது.
மக்கள் கருத்து
தனலட்சுமி வல்லத்துறை: ‘சிதம்பரம் அருகேயுள்ள நீா்நிலைகளில் திரியும் முதலைகளால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதால், முதலை பண்ணை அமைப்பக்கப்படும் என எம்எல்ஏ வாக்குறிதி அளித்தாா். ஆனால் இன்று வரை நிறைவேற்றப்பட்டவில்லை.
விவசாயி விஜயன் கவரப்பட்டு
இயற்கை இடா்பாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை பெற்ருத்தரவில்லை. வேளாண்மை துறை மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை
மனோகா் அண்ணாமலை பல்கலை. ஊழியா்
மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின் போது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களின் பிரச்சனைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை .