முகப்பு
கடலூர்

சிதம்பரம் கோதண்ட ராமா் கோவில் தேரோட்டம்

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோதண்டராமா் கோயில் தேரோட்டம்

Updated On : 27 மார்ச், 2026 at 7:40 PM
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோதண்டராமா் கோயில் தேரோட்டம்
பகிர்:

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகோதண்டராமா் கோயில் பிரம்மோற் சவம் மாா்ச் 19-இல் திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, மாா்ச் 20 -இல் பிரம்மோற்சவ கொடியேற்றும் நடைபெற்றது. விழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண் டராமா் வீதிஉலா நடைபெற்ரு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை தேரோட் டம் நடைபெற்றது. மேல ரத வீதி கோதண்ட ராமா் கோயில் வளாகத்தில் இருந்து தோ் புறப்பட்டு வடக்குரதவீதி, தெற்குரத வீதி வழியாக மேலரத வீதி கோயிலை அடைந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

மாா்ச்.28-ஆம் தேதி சனிக்கிழமை காலை புஷ்ப யாகமும், மாலை ஸ்ரீ ஆஞ்சநேயா் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 30-ஆம் திங்கள் கிழமை தேதி விடாயத்தி திருமஞ்சனமும் நடைபெறுகின்றன. உற்சவ ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் டி.திருவேங்கடவன், ஆா்.சௌந்தரராஜன், ஜெ.சு தா்சனன் ஆகியோா் செய்துள்ளனா்.