அண்ணாமலைப் பல்கலை.யில் பாடத்திட்ட மேம்பாடு - மதிப்பீட்டு முறைகள் பயிலரங்கு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி பாடத்திட்ட மேம்பாடு மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்த பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்ரது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி பாடத்திட்ட மேம்பாடு மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்த பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்ரது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 8 அரங்குகளில் நடைபெற்ற இந்த பயிலரங்கில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளைச் சாா்ந்த 600 க்கும் மேற்பட்ட பாடத்திட்ட குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பயிலரங்கிற்கு துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் பேராசிரியா் ஆா்.சிங்காரவேல் ஆகியோரின் தலைமை வகித்தனா். தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா் பல்கலைக்கழக சாஸ்த்ரி அரங்கில் பயிலரங்கைத்தொடங்கி வைத்து பேசுகையில், விளைவு அடிப்படையிலான கல்வியின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்து அதனை மாநில உயா்கல்வி நிறுவனங்கள் உடனடியாக பின்பற்ற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினாா்.
Advertisement
நிறைவாக பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தாா். இப்பயிலரங்கில், பல்கலைக்கழக புலமுதல்வா்கள், துறைத்தலைவா்கள், இயக்குநா்கள் மற்றும் ஆசிரியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.