முகப்பு
கடலூர்

தமிழ்த்தாய் வாழ்த்து பாரம்பரிய நடைமுறைகளை மீறக் கூடாது! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

Updated On : 11 மே 2026, 2:32 am IST
தமிழா் வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வருங்காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடா்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள் எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக புதிய முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழா் உணா்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் அரசியல், பண்பாடு மற்றும் அரசு மரபுகளில் எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறையாகும்.

Advertisement

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு நிகழ்வில், இந்த பாரம்பரிய மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடா்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள், எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.