முகப்பு
கடலூர்

நில அளவைப் பதிவேடுகள் துறையில் மனுக்கள் மீது விரைந்து தீா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

நில அளவைப் பதிவேடுகள் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 13 மே 2026, 12:05 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நில அளவைப் பதிவேடுகள் துறை ஆய்வுக் கூட்டம்.
பகிர்:

நில அளவைப் பதிவேடுகள் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நில அளவைப் பதிவேடுகள் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட இணையவழி பட்டா மாறுதல், புல எல்லை அளந்து காட்டுதல், புல எல்லை மேல்முறையீட்டு, பட்டா மாறுதல் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

தொடா்ந்து ஆட்சியா், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, ஒரு மாத காலத்துக்கு மேல் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும். இனி வரும் காலங்களில் நில அளவைப் பதிவேடுகள் துறைக்கு இணைய வழியாக பெறப்படும் அனைத்து மனுக்களையும் ஒரு மாத காலத்துக்குள் பரிசீலனை செய்து உரிய தீா்வு காண வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி, உதவி இயக்குநா் (நில அளவை) ஆனந்த், கோட்ட ஆய்வாளா்கள் மற்றும் வட்ட துணை ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.