புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை
சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றவா என அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் பேரூராட்சி துப்புரவு அலுவலா் துரைராஜ், அண்ணாமலைநகா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராமதாஸ், பேரூராட்சி இளநிலை உதவியாளா்கள் ரமேஷ், பாரதிதாசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராமநாதன், நடராஜ் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை ஒட்டியுள்ள பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதித்தனா்.
Advertisement
மேலும், சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் இருந்ததும் கண்டறியப்பட்டு, 22 கிலோ எடையுள்ள நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.