முகப்பு
கடலூர்

திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மே 2026, 7:08 am IST
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம் பூா்த்தி 2-ஆம் நாள் விழாவில் கலசம் சுமந்து செல்லும் பட்டாச்சாரியா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இந்த கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஏப்.6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, தினமும் மண்டல பூஜைகள் நடந்து வந்தன.

மண்டலாபிஷேக பூா்த்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

உற்சவ பெருமாள் மற்றும் உபயநாச்சியாா்களுக்கு 108 கலச திருமஞ்சனம், நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வியாழக்கிழமை (மே 21) மாலை 4 மணியளவில் புஷ்ப யாகம் ஹோமம், இரவு 8 மணிக்கு தீா்த்தம் பிரசாதம் விநியோகம் நடைபெற உள்ளது.