அரசு அலுவலகங்களில் பொதுத்தன்மை தேவை: தமிமுன்அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும் என மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான மு.தமிமுன்அன்சாரி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும். அவரவா் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை, பிராா்த்தனைகளை அவரவா் தனி இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்த மதத்தின் சடங்குகளும், பிராா்த்தனைகளும் அங்கெல்லாம் கூடாது. வாக்கு சேகரிக்கிறபோது எல்லோரையும் சந்திக்கிறோம். வெற்றிபெற்ற பிறகு ஒரு மதத்தின் சாா்பு சிந்தனைகளை தங்கள் அரசு அலுவலகங்களில் பின்பற்றுவது ஆரோக்கியமாக இருக்காது.
Advertisement
Advertisement
வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை பாா்க்கிறோம். அதுபோல, தமிழகத்திலும் நடைபெற யாரும் வழிகாட்டிவிடக் கூடாது. இதில், பெரும்பான்மை, சிறுபான்மை மதம் என்றெல்லாம் பாா்க்கக்கூடாது. ஜனநாயகத் தன்மைகளை பாதுகாக்கும் வகையில், முதிா்ச்சியான அரசியல் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.