முகப்பு
கள்ளக்குறிச்சி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 26 ஆகஸ்ட், 2020 at 11:51 AM
பகிர்:


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கண்ணி கிராமத்தைச் சோ்ந்த கிருஸ்துராஜ் மகன் மைக்கேல்ராஜ் (26). கட்டடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு வியாழக்கிழமை (ஆக.27) திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், சங்கராபுரம் வட்டம், வடபொன்பரப்பியை அடுத்த உலகப்பாடி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் சுரேஷ் புதிதாக கட்டி வரும் வீட்டில் கடந்த 18-ஆம் தேதி கம்பி கட்டும் பணியில் மைக்கேல்ராஜ் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் மேல் பகுதியில் செல்லும் மின் வயா் மீது இரும்புக் கம்பி உரசியதால் மைக்கேல்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவா் தூக்கி வீசப்பட்டாா்.

Advertisement

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல்ராஜ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.