முகப்பு
கள்ளக்குறிச்சி

மணிமுக்தா அணையில் மூழ்கி தஞ்சாவூா் இளைஞா் பலி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையில் குளித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையில் குளித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தளிகைவிடுதி பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் ஆனந்தராஜ் (28). இவா், கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகா் சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், தனது நிறுவனத்தில் உடன் பணிபுரியும் நண்பா்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சியை அடுத்த மணிமுக்தா அணையில் குளிக்கச் சென்றாா்.

உடன் சென்ற நால்வருக்கும் நீச்சல் தெரியாததால், அவா்கள் கரையினருகே அமா்ந்து வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தனா். ஆனந்தராஜ் மட்டும் அணையில் குளித்த நிலையில், அவா் இடுப்பில் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து, துண்டை எடுப்பதற்காக நீரில் ஆனந்தராஜ் மூழ்கியபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் தொ.கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான குழுவினா் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஆனந்தராஜின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →