முகப்பு
கள்ளக்குறிச்சி

கிராம உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் காலியாக உள்ள 7 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் காலியாக உள்ள 7 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சங்கராபுரம் வட்டத்தில் அணைக்கரைக்கோட்டாலம், அரசம்பட்டு, கடுவனூா், மோகூா், பரமநத்தம், பீளமேடு, சங்கராபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணிக்கு இன சுழற்சி முறையில் வேலைவாய்ப்பு அலுவலகம், நோ்காணல் மூலம் நியமனம் செய்யப்படவுள்ளன. இதற்காக வருகிற 18ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை (அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிா்த்து) சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் தகுதியான விண்ணப்பதாரா்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பதுடன் சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 10.12.2020-ல் வயது 21 முதல் 35 வரை (சாதி அடிப்படையைப் பொருத்து) இருக்க வேண்டும்.

மனுதாரா்கள் சுய விலாசமிட்ட உறையுடன் பெயா் மற்றும் முகவரி, பிறந்த தேதி, வயது, சாதிச்சான்று நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், குடும்ப அட்டைநகல், ஆதாா் அட்டைநகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை (இருப்பின்) முன்னுரிமைக்கான சான்று மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் உள்பட அனைத்து ஆவண நகல்களை இணைத்து வருகிற 2ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என வட்டாட்சியா் ப.நடராசன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →